வெள்ளி, 22 டிசம்பர், 2017

வன்னியர் குல சத்ரியர் வரலாறு

வன்னியர் ஆவணம்

             வன்னியர் ஆவணம்
இந்தியாவின் சத்ரியர்களான வன்னியர்(அக்னி) குல சத்ரியர்களின் வரலாற்று தடயங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி எனும் வன்னியர் குல சத்ரியரின் வரலாற்று தடயங்கள் சிலவற்றை கான்போம்.
புராணங்களில் வன்னியர்
     இந்தியாவில் இந்து மதத்தில் 18 புராணங்கள் உள்ளது. இந்த 18 புராணங்களில் 9 வது புராணம் அக்னிபுராணமாகும். அக்னிபுராணத்தின் தமிழாக்கமே வன்னிய புராணமாகும். இதை  சம்புமைந்தர்  காப்பியம் ஆகிய வன்னியர் புராணம் என்றும் அழைப்பர். இந்தியாவில் புராண சிறப்புக்கொண்ட ஒரே இனம் வன்னியர் குல சத்ரியர் மட்டுமே.
1)       சிருஷ்டி சருக்கம்
2)     வில்வலன் வதைச் சருக்கம்
3)     வாதாவி சூரன் தவம்புரிச் சருக்கம்
4)     இரத்தினாபுரிச் சருக்கம்
5)     வாதாவிக்கு படை மிகுந்த சருக்கம்
6)     வாதாவிக்கு வஜயஞ்செய்  சருக்கம்
7)     நாரதர் தூதூ சருக்கம்
8)     சிவனாலோதனைச் சருக்கம்
9)     சம்புமகரிஷி வேள்விச் சருக்கம்
10) வன்னிய ராசாக்கள் உற்பத்திச் சருக்கம்
11) சூறைச் சருக்கம்
12) வீர வன்னியர்கள் படையெழுச்சிச் சருக்கம்
13) நாரதர் வாதாவியினடம் தூதூ போன சருக்கம்
14) வீரவன்னியன் துர்கையுடன் கடல்தாண்டு சருக்கம்
15) விநாயகர் காவற் சருக்கம்
16) துர்க்கை சோதனைச் சருக்கம்
17) மந்திராலோசனைச் சருக்கம்
18) வாரதன் யுத்தம் முதல் நாள்
19) குண்டலன் சண்டை  இரண்டாம் நாள்
20) மகோன் யுத்தம் மூன்றாம் நாள்
21) மகோதரன் யுத்தம் நான்காம் நாள்
22) கெமலா சுரன் யுத்தம் ஐந்தாம் நாள்
23) கஜமுகா சூரன் யுத்தம் ஆறாம் நாள்
24) கும்பா சூரன் யுத்தம் ஏழாம் நாள்
25) ஜம்புமாலி யுத்தம் எட்டாம் நாள்
26) மூலபலச்சண்டை ஒன்பதாம் நாள்
27) காளிக்கும் தூர்கைக்கும் யுத்தம் பத்தாம் நாள்
28) வாதாவி யுத்தம் பதினோராம் நாள்
29) நகரழித்த சருக்கம்
30) மீட்சிச் சருக்கம்
31) அரசியற்சருக்கம்
எனும் 31 சருக்கங்களை கொன்டது வன்னியபுராணம் ஆகும்.
வன்னியபுராணத்தால் அறியலாகும் செய்தி.
வீர வன்னியர் தோற்றம்.
அக்னி குதிரையின் மேல்  சிரசில்   கிரிடமும், கையில் வில்லும், கேடயமும், வேலும். மார்பிற் பூணூலும், மேகலாபரணமும், புயகீர்த்தியும், சிங்கமுகத்தோடவும், கையில், கடகமும், மலர்போன்ற பாதத்தில் வீரகண்டாமணியும். அம்பும், அம்பறாத்தூணியும், காதிலே மகரகுண்டலமும், நெற்றில் வெண்ணீறும். மேகம்போல் தலைமயிர்ச்சடையும், கட்டாரியும், வாளும், செங்கழுநீர்மாலையை யணிந்த தோளும், இடுப்பில் கட்டிய கச்சையுஞ் சல்லடமும், பீதாம்பரம் இவைகளணியப்பட்ட வீரவன்னி மகாராஜன் உதித்தான்.
வன்னியர் புதல்வர்கள்
  உருத்திர வன்னியர்க்கு கிருஷ்னவன்னியர், சம்புவன்னியர், பிரம்மவன்னியர், இந்திரவன்னியர், கங்கவன்னியர் எனும் ஐந்து புதல்வர்கள் பிறந்தனர் இவர்களுடன் 354000 வில்லாளிகளும் அக்னியில் பிறந்தனர்.
திருமால் சத்தியம்  செய்து கொடுத்தல்
           வீரவன்னியமகராஜன் எங்கே சண்டை, எங்கே போர். எங்கே அரக்கர் கூட்டம் . என்னை அழைத்த நோக்கம் யாது என கேட்க. பிரமன் சிவனின் வியர்வையில் பிறந்த்தால் சிவனும், பார்வதியுமே உன் தாய், தந்தை எனவும், திருமால் உனக்கு மாமன் எனுவும் கூறினார். தந்தையாகிய சிவனையும், தாய் பார்வதியையும், மற்ற தேவர்களையும் வணங்கினான் வீர வன்னியன். சிவன் தன் மகனிடம் வாதாவியை அழிக்கவே உன்னை உருவாகினோம் என்றார், திருமாலை பனிந்தவீர வன்னியனிடம்  திருமால் இனி நான் எடுக்கவிருக்கும் இரு அவதாரங்களும்(இராமன், கிருஷ்னன்   ) உன் சந்ததிய இனத்திலே நீகழும் பூவுலகம் உள்ளவரை நம் இனத்தின் புகழ் இருக்கும் என்வும், வாதவியை அழிக்க நான் உமக்கு தூனை நிற்பேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார்.
தேவேந்திரன் மகளை திருமணம் செய்தல்.
           மந்திரமாலையின் வலதுகாலை அம்மியில் வைத்து, பெண் காணுபடி அருந்ததியைக் காட்டி சிம்மாசணத்தில் இருவரையும் அமர்த்தி. பரமசிவனும் பார்வதியும் மந்திரமாலையின் நெற்றில் மாமன், மாமீ   பட்டம் கட்டி திருமணம் செய்து வைத்தனர்.     வீரவன்னியர் குலத்திற்கு திருமாங்கில்யம்  வினாயகனைப்போல் பொன்சரட்டில் கோர்த்து செய்யவேண்டும் என பரமசிவன் விஷ்வகருமனை பனிக்க விஷ்வகருமனும் செய்து கொடுத்தான். வீரவன்னியமகராஜன் மந்திரமாலை கைவிரலைத் தன் கையினாற்பிடித்து ஒமகுண்டத்தை வலம் வந்து திருமணம் நிகழ்ந்தது. மாலையில் தேவேந்திரனின் சிங்காரமண்டபத்தில் போய் விருந்துண்டான்.
வாதாபியை வெற்றிக்கொள்ளுதல்.,,
           வாதிவி இரத்திணபுரி பட்டணத்தை ஆண்டான். மகேந்திரமலை வாதவியுடையது. தேவர்களால் படைக்கபட்ட வீரவன்னியமகராஜனும், அவன் புதல்வர்களும் வன்னியில் பிறந்த வன்னியர் படை வாதவி வீர்ர்களை கொன்று பின் வாதவியை கொன்றனர்.
வன்னியரின் கொடிகள்
           பஞ்சவர்ணகொடி, அரவக்கொடி, ஆளிக்கொடி, சிங்கக்கொடி, மீன்கொடி, புலிக்கொடி, ஆனைக்கொடி, நரிக்கொடி, மயிற்கொடி, கருடக்கொடி, ரிஷபக்கொடி, அன்னக்கொடி, கோழிக்கொடி, அனுமக்கொடி, காவிக்கொடி, பூதக்கொடி, முரசுக்கொடி, செங்காவிக்கொடி, மகரக்கொடி,
இதிகாசத்தில் வன்னியர்கள்
1)       மகாபாரதம், ஆதிபருவம், 169-வது ஸ்லோகத்தில், "யாகசேனர் இயற்றிய வேள்வித்தீயினின்றும் 'திருஷ்டத்யும்மனும்', 'திரௌபதியும்' தோன்றினர்" என்று கூறப்பட்டுள்ளது. வில்லிபுத்தூரார் மகாபாரதமும், எங்கள் குல திரௌபதியை "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று குறிப்பிடுகிறது.

2)     மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-

"
ஓ அக்கினியே ! நீதான் இரண்டு
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன் ! நீயே சந்திரன் !
நீயே வாயு ! "




3)     மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-


"
அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்
சம்புமக்நி மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா”

விளக்கம் : வேதத்தில் மிகவல்ல பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

4)     தமிழ் பாகவதம் 8-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :-


"
இயம்பு இரண்டாம் சீர் மனுவினை உரைக்கின்
இலங்கும் அக்கினி முனம் ஈன்ற
நயம் தரு சுவாரோசி நவன் உலகம்
நவை அறக் காக்கும் நாள்"


விளக்கம் : அக்கினியின் மகனான ஸ்வரோசி எனப்படும் இரண்டாம் மனு அரசுரிமை பெற்று அரசாட்சி செய்தான். இதே விபரம் பாகவதம் (சமஸ்கிருதம்) 8-வது காண்டம், முதல் அத்தியாயம், 20-வது ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ளது.




5)     "மச்சபுராணத்திலே, 195-வது அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறப்பட்டிருக்கின்றது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்பதற்கு வடமொழி இலக்கணஞ் செய்த பாணினி முனிவரும் "பாண்டிய" வென்னும் மொழிக்குக் காரணத்துடன் பகுப்பிலக்கணம் சொல்லி பாண்டியர் பாண்டுவின் வம்சத்தில் வந்தவரென்று கூறியிருக்கின்றனர். (Rev. William Tailor, Pandiya History, Second volume).
சங்க இலக்கியம்
===========


1)   "நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்" (புறம்-201),
The Sangam Age Literature, "Pathitru Pathu" (பதிற்றுப் பத்து) refers about "Vanniya Mandram" :-

   2)           "
மன்னர் மறைத்த தாழி
                    வன்னி மன்றத்து விழங்கிய காடே"


3) திரிகடுகம், நல்லாதனார், பாடல்-46 says the following :-


   "
கால் தூய்மை இல்லாக் கலிமாவும் காழ்கடிந்து
  மேல் தூய்மை இல்லாத வெங்களிறும் சீறிக்
 கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இம் மூன்றும்
 குறுகார் அறிவுடையார்"
4)      மன்னர்கள் தமது முன்னோர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பினர். இவற்றில் வழிபாடுகளை கூட அவர்கள் நடத்தினர். இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு "கோட்டம்" எனவும் "பள்ளி வாயில்" எனவும் பெயர் வழங்கப்பெற்றது :-

"இந்த ஈமப்புறங்காட்டு அரசர்க்கமைந்த ஆயிரம் கோட்டம்" (மணிமேகலை, வரிகள் - 165 & 166).

5)      "ஓதுக்கின்றிணி புதுப் பூம்பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை விழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே" (புறம் 33 : 20 -22)


விளக்கம் : ஒவ்வொரு பள்ளி மாடத்துக்கும் சென்று சோழ மன்னன் நலங்கிள்ளி வழிபாடு செய்தான் என்று புறநானூறு கூறுகிறது. "பள்ளி மாடம்" என்பது அரச குலத்தோரின் சமாதி. "பள்ளி" என்ற சொல் அரச குலத்தில் வழங்கப்பட்டு வந்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

"
வன்னி" எனில் "மன்னன்"
========================
6)      கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து இருக்கிறார். திருவள்ளுவரின் காலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது. இதில் "அரசன்" என்று குறிப்பிட "வன்னி" என்ற சொல்லையே கல்லாடனார் பயன்படுத்தி இருக்கிறார்.



"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச்
செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்றும் படர்களைக் கட்டுத்
திக்கு படரானை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கும்
நாற்படை வன்னியராக்கிய பெருமான்"


விளக்கம் : பன்னிரண்டு பன்றிக் குட்டிகளை நாற்படை வன்னியராகச் சிவபெருமான் படைத்தார் என்கின்றது கல்லாடம். இவ்வுலகில் தருமம் என்னும் பயிர் தழைத்து ஓங்கும் வகையில் நால்வகை சேனைகளுடன் வன்னியர்களை உண்டாக்கிய கடவுள்.
பிற்கால வன்னியர் ஆவணம்.
1)     "சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"
(Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjunarayar, 1463 A.D).

2)     "கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்" (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).


3)     (புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின்
சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு)

பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும்
பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு
குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய
சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).



4)     "ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"

(I.P.S. No.530), (
புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில்,
கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).



பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள்
அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழர்கள்
"
வன்னியர்கள்" என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரு கல்வெட்டுகள் வலுசேர்கின்றன.
5)     நீலகண்டரையன் என்ற சிற்றரசர் ஆட்சி செய்தபோது, வயலூர் போரில் "பள்ளி மாமல்லன்" என்ற வீரர் அம்பலம் அழியாமல் காப்பதற்க்காகப் போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளார் என்று கிழ்காணும் நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது :-


"
ஸ்ரீ கோவிரசகேசரி
பன்மக்கி யாண்டு இருபத்து ஆறாவது நீல
கண்டரையர் நாடு வயல் ஊர் அம்
பலம் அழிய பட்ட பள்ளி மாமலன்
னுக்கு நீத் தோல்பட்டி ஊற்(ற) அட்டிக் குடு
தேந் நீல கண்ட்டரையன்
னேன் இது இறக்குவான் ஏழாநரக
த்து கிழா நாகத்தி
நில்
வீழ்வா
ன்"


(
ஆவணம்-24, பக்கம்-28), (திருவண்ணாமலை, வயலூர் வேடியப்பன் கோயில் நடுகல், முதலாம் ஆதித்த சோழன், கி.பி. 897).




6)     "தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள கண்டராதித்த சோழன் (கி.பி. 955 - 963) காலத்திய கல்வெட்டில் "உறையூரி வன்னி நங்கலி வெள்ளி குணவி" என்ற வன்னிய வீரப்பெண்மணி குறிப்பிடப்படுகிறாள்.

7)      முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டில் "குப்படி வன்னியான க்ஷத்ரிய சிகாமணித் தொங்கற்பேரையன்" என்ற அதிகாரி குறிப்பிடப்படுகிறார். (S.I.I. Vol-II, No.66, Line-15).
பல்லவன் தன்னை காடவன் (வன்னியன் ) என்று தெளிவாக குறித்துள்ளான் .. இந்த காடவர் குளத்தில் வந்த மன்னனும் தன்னை பள்ளி என்று கூறியுள்ளான் ..

 ஆதாரம் ஒன்று :
=============
பாடல் :

"
வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"


என்று பாடுகிறது பெரியபுராணம்.

விளக்கம்:
(
காடவன் - பல்லவன் மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.)

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே
இதில் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார்.

இப்பாடலில் காடவனை பல்லவர் என்கிறார் சேக்கிழார்.

அதாரம் 2 :
==========
சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்

`
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்`

எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

ஆதாரம் 3 :
=========
இதோ காடவர்கள் (பல்லவா்கள்) தங்களை பள்ளி என்று கூறும் கல்வெட்டுகள்.
உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
Society in Transition: Ancient to Medieval"
ஆய்வு நூலில் கல்வெட்டு
ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.
கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
இவன்தான்.)
மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின் தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார்.
From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74

In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.

Pages 137 & 139

Kopperunjinga, one of the Kadava chiefs of the thirteenth century, is famous for having taken captive his own master, Rajaraja III of the Cholas, for some time in Sendamangalam in South Arcot District.

A Tiruvadi inscription (SII, vii – 319; SA, 1145) records that Araisanarayan alias Kulottungachola Kachchiyarayan, a Kadava chief…

Another Tiruvadi inscription (SII, vii – 320; SA, 1146) records theremission by Elisaimahan alias Kulottungachola Kadavarayan, probably an

elder brother of Araisanarayan of previous inscription…

We have

three more inscriptions of this chief, which are found in Vriddhachalam
(SII, vii – 150; SA, 11468), Srimushnam (ARE 1916 – 232, SA, 1152), and
Tirunarunkondai (SITS – 74; SA, 1156). In the first two he is described
as a Palli who has kani right in Erumbur.


   இப்படி பல்லவர்கள் காடவர் மரபு என்றும், காடவர்கள் பள்ளிகள் என்பதும் உறுதி செய்யப்பட்ட ஒன்று .

8)     """கண்டன்மார் தந்திரியார் படையாக்ஷியார் என்னும் பல பட்ட பெயர் பெற்ற "சோம சூரிய அக்கினி வம்ச" பண்ணாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்சுன தேவ மஹா ராயரைக் கண்டு பேச அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமதுவம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூஜை யிருக்க மடத்து தருமம் நமகேனென்று இராயரும் கேட்க அப்போது நாயனார் பண்டாரத்தார் பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் முதலிய மற்ற மண்டலங்களில் குரு மடங்கட்டியிருக்க தொண்டைமண்டலதிலேயும் இருக்க வேண்டுமென்றார்.:"""



செப்பு பட்டயம் எண் 10
காலம் : சகம் 1563 , கி பி 1641 ஆங்கிரச ஆண்டு
அரசர் ; மல்லிகார்சுன தேவமஹாராயர்
9)      "அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே" (திருமூலர் திருமந்திரம்

10) நாகமரபினர் என்று கங்கரைச் கூறுவர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றனர். கங்கர் கிளையினர் வாழ்ந்த பகுதி 'பங்களநாடாகும்'. பங்களநாடு என்பது இன்றைய திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளாகும். பங்களநாட்டு கங்கரையர் என்று இவர்கள் அறியப்படுகிறார்கள். இவர்கள் பல்லவர்கள், இராஷ்டிரகூடர்கள் மற்றும் சோழர்களுக்கு குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். இவர்கள் "வன்னியர்கள்" என்று திருவண்ணாமலை கிளிகோபுரகல்வெட்டு குறிப்பிடுகிறது.
11)  தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் நுளம்பமன்னன் நடுகல் உள்ளது. சகஆண்டு 822 என்பதால் கி.பி.900 ஆகும். நுளம்பமன்னன் ஐய்யப்பதேவன் மகன் சிவமாரைய்யனும் கங்காணுமன் மகன் இரண்டாம் பிருதிபதியும் மறவகுன்று என்ற இடத்தில் போரிட்டனர். நுளம்பனுக்குத் துணையாகத் தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் சேவகன் கூடல் மாணிக்கன் இருந்துள்ளான். போரில் மாணிக்கம் இறந்துவிட அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. வீரனின் பெரிய மகன் "மாதேவன்னி" நடுகல் ஏற்படுத்தியுள்ளான்.


"
தகடூருடைய மாவலிவாணராயரடியா
ன் கூடல் மாணிக்கன் சிவமாரைய்யனுக்காய் எறிந்து பட்டாரவர் பெ
ரியம் மகன் மாதேவன்னிக் கல்லு நடுவித்தான் ஸ்ரீ மதியுளி"

(
தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/15)



"
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் உள்ள மற்றொரு நடுகல் கல்வெட்டு, கி.பி.898-ல் கங்கானுமான் ஆட்சியின் போது தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் அடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்று என்ற ஊரினை ஆண்டுவந்தான். இவனுடைய மாமனும் கோவூர் நாட்டைந்நூறும் உடையவனுமான மழற்பையன் என்பவரின் அடியான் சூழ்புனியன் என்பவன் புலியைக் கொன்று தானும் இறந்தபட்டுள்ளான். இவனுக்கு 'மாதேவன்னி' நடுகல் எழுப்பியுள்ளான்.


"
தகடூர் மாவலிவாண
ராயரடியான் கடல் மாணிக்கன்[னு]லை குன்றினை ஆ[ள்]
வன் மாமன் கோவூர் நாட்டைந்நூறுமுடைய மழற்பை
யன்னடியான் சூழிபுளியன் புலி
எறிந்து ப
ட்டான்
மதியுளி"

(
தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/14)


கோவூர் நாடு ஐந்நுறு உடையவனான 'மழவர் மகன்" (மழற்பையன்), மாதேவன்னியனின் தந்தைக்கு "மாமன்" ஆவான். அப்பகுதி அக்காலகட்டத்தில் "மழவூர்" என்று விளங்கியது. மழவர் வாழ்ந்த பகுதி மழவர் நாடாகும்.


"
ஸ்ரீசிரீ புருச பருமற்கு..........
தாவது பிருணிதுவியார் புறமலை
நாடாள மழவூர்த் தொருக்கொண்ட ஞா
ன்று செருப்பச்சடையன் பட்டான்"

(
தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/18), (தருமபுரி, ஆரூர் வட்டம், சின்னாங்குப்பம்), (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு).

12)நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-


"
பள்ளி வேளான்"

"
பராந்தக வேளான்"

"
அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"

"
பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"


(
திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)
இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.
வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-


"
ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான
மதுராந்தகப் பள்ளி வேளான்
பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்"

(
கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40)



பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான். வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.
13)
"
கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்" (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).

(
புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின்
சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு)

பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும்
பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு
குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய
சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).


"
ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"

(I.P.S. No.530), (
புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில்,
கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).


பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள்
அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழர்கள்
"
வன்னியர்கள்" என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரு கல்வெட்டுகள் வலுசேர்கின்றன.

Sambuvaraya Dynasty :


"
முன்னூற்றூர் குடிப் பள்ளி செங்கேணி
சம்புகராஜன் நாலாயிரவன் அம்மையப்பனான
ராஜேந்திர சோழச் சம்புகராஜன்" (A.R.E. No.422 of 1902).


"
அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான
ராஜகம்பீர சம்புவராயனென்" (S.I.I. Vol-I, No.74, Page-105).


"
செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன்
சம்புவராயன் (A.R.E. No.234 of 1910).


"
வன்னியனான அம்மை அப்பந்
சம்புவராயன் (A.R.E. No.184 of 1904).


"
ஸ்வஸ்திஸ்ரீ சம்புகுலச் சக்ரவத்தி திருமல்லி நாதன்
சம்புவராயப் பெருமாள் திருவெங்கடமுடையானுக்கு"

(Tirupathi Devasthanam Inscription, Vol-I, No.183, page-170).


"Sambuvar Kula Pathi Pannattar" (A.R.E. No.276 of 1934-44).

(Raja Raja Chola-III, 1227 A.D, Valikandapuram, Perambalur Distt)


"
கங்காதேவி எழுதிய 'மதுராவிஜயம்' என்னும் நூல்
சம்புவராயர்களை 'வன்னிய அரசர்கள்' என்று
குறிப்பிடுகிறது"

(Madhuravijayam, S. Thiruvenkatachari, year-1957, page-24).



Nilagangaraiyar Chieftains / Pangalanattu Gangaraiyar Chieftains :


"
ஆமூரிருக்கும் பள்ளி ஆம்மூரி பிச்சநாத
ராஜேந்திர சோழ நீலகங்கரையன்" (A.R.E. No.159 of 1918).


"
தூசி ஆதிநாயகன் நீலகங்கரெயன் வன்னிய நாயநான
உத்தமநீதிக் கண்ணப்பன்" (S.I.I. Vol-III, Part I & II, No.36, Page-82),


"
வில் வீர பராக்கிறமரான ருத்திரப் பள்ளியார்
குமாராகிய நீலகங்கன்"

(
பன்னாட்டார் பட்டயம், 1633 A.D)


"
வில் வீர பராக்ரமனான ருத்ரப் பள்ளியார்
குமாராகிய நீலகங்கன்"

(
இடங்கை வலங்கையர் வரலாறு, தமிழ் நாடு அரசு கீழ்த் திசைக்
சுவடிகள், பக்கம்-11).


"
பங்களநாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன்
வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (Line-2)

"
கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன்
அழகிய சொழநென் என் வங்சத்தில் இது இறக்குவான்
கெங்கை இடைக் குமரி இடை" (Line-5)

(Thiruvannamalai, Kiligopuram Inscription, Kulotunga chola-III)
(A.R.E. No.546 of 1902), (S.I.I. Vol-VIII, No.137)

17)
Malayaman Chieftains :


"
வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்"

(S.I.I. Vol-XII, No.240) (Arur, Thiruvannamalai).


"
வன்னியநாயன் செதிராயனென்"

(S.I.I. Vol-XII, No.241) (Arur, Thiruvannamalai).


"States that the Mandapa was erected by Raman Porkudanguduttan alias
Vanniya Devendra Malaiyaman"

(A.R.E. No.215 of 1934-35) (Thirukkoyilur)


"
பெரிஉடையான் அமட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன்
கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்"

(S.I.I. Vol-VII, No.117) (Chengam, Thiruvannamalai).


"
பெரிஉடையான் அமட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன்
கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வாராந வந்னிய மக்கள் நாயன்"

(S.I.I. Vol-VII, No.120) (Chengam, Thiruvannamalai).


"Records the digging of a pond (at this place) by periyudaiyan Raja raja - kovalrayan palavayudha pallavaraiyan son of Iraiyuran Raja raja - Chediyarayan Vanniyanayan"

(A.R.E. No.381 of 1937-38) (Tirukkoyilur)


"States that the Nritta-Mandapa was the gift of Malaiyaman Periyaudaiyan Iraiyuran Sarrukkudadan Vanniyanayan of Killiyur"

(A.R.E. No.171 of 1934-35) (Tirukkoyilur)


"Records the vow of loyalty taken by Taluvinal and Valli, two velaikkari of Vanniyanayan not to survive the death of their master"

(A.R.E. No.136 of 1934-35) (Thirukkoyilur)


"Records a similar vow taken, by Chediyaraya Malaiyaman, a velaikkara of Vanniyanayan"

(A.R.E. No.145 of 1934-35) (Thirukkoyilur)


"Records a similar vow taken by twelve velaikkaris (names given) of Vanniyanayan"

(A.R.E. No.147 of 1934-35) (Thirukkoyilur).


"Registers a similar vow taken by Gangan a velaikkara of Vanniyanayan Sarrukkudadan"

(A.R.E. No.154 of 1934-35) (Thirukkoyilur)


"Records a vow made by Atkondanachchi a velaikkari of Sarrukkudadan to die with her master"

(A.R.E. No.157 of 1934-35) (Thirukkoyilur)


"States that Tiruvudaiyal, a velaikkari of Vanniyanayan vowed to give up her life with her master"

(A.R.E. No.158 of 1934-35) (Thirukkoyilur)


"Records a similar vow made by Akarasura Vilupparaiyan to die with his master Sarrukkudadan"

(A.R.E. No.159 of 1934-35) (Thirukkoyilur)


"Records a similar vow made by Ariyar Vallal, a velaikkara of Vanniyanayan"

(A.R.E. No.156 of 1934-35) (Thirukkoyilur)


"Registers a vow taken by five velaikkaras of Sarrukkudadan, among whom figure Kovalraya - Malaiyaman Kiliyura alias Chediyaraya Malaiyaman"

(A.R.E. No.153 of 1934-35) (Thirukkoyilur)


"Records a vow taken by Kariyan alias Palavayudhavalla Malaiyaman, a velaikkara of Iraiyuran Periya-udaiyan alias Rajaraja - Chediyarayan not to survive his master"

(A.R.E. No.202 of 1934-35) (Thirukkoyilur)


"Registers a vow of fealty taken by Vanniya Nachchi and another (name lost), two velaikkaris of Sarrukkudadan"

(A.R.E. No.122 of 1934-35) (Thirukkoyilur)


"Records a similar vow taken by a velaikkaran called Dimaraya Malaiyaman"

(A.R.E. No.124 of 1934-35) (Thirukkoyilur)


"
பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்"

(A.R.E. No.67 of 1906), (Jambai, Kulottunga Chola-I)


Like that, another 13 inscriptions states about Vanniyanayan Sarrukkudadan.

"Damaged. Refers to a political compact between Kadavarayan and Rajaraja Chediyarayan by which they agreed to be no more in feud. The marriage of the daughter of the former with Akarasuran alias Rajaraja Kovalarayan seems to have been the cause of discord" (A.R.E. No.480 of 1921).


13th century : "Vanni", the Chera king of Quilon :


"Yang Ting-pi was not at the end of his travelling; a few months after his return (in the 1st moon of the 20th year chihy wan, January - February 1283) he was made imperial commissioner, honoured with imperial gifts of a bow and arrows, a saddle and bridle, and sent on a new mission to Kulam (Quilon) and other states. He was also entrusted with a golden badge for "Wa-ni", king of Kulam (Quilon), on whom the Emperor conferred the title of Fuma or imperial son-in-law."

(1279 - 1292 A.D., Embassies between China and South India, Page - 153, Foreign Notices of South India, K.A. Nilakanta Sastri, University of Madras - 2001).


"Possibly as a result of the arrival at the Mongol Court in the 7th moon of 1279 of missions from Mabar and Annam (chan-cheng) which presented the emperor with a live elephant and a rhinoceros, yang Ting-pi, the able lieutenant of So-tu and now Commander-in-Chief in Kuang-tung with the title of Daruga, was appointed Imperial Commissioner in the 12th moon of the year (early part of 1280 A.D) with orders to proceed to Kulam (Quilon) to invite the ruler (Pi-na-ti) to recognise Kublai as his liege Lord and to send an envoy to China; this he promised to"

Note : The ruler "Pi-na-ti" means, the "Pannattar" (i.e) the "Vanniyar"

(1279 - 1292 A.D., Embassies between China and South India, Page - 150, Foreign Notices of South India, K.A. Nilakanta Sastri, University of Madras - 2001).

Mazhavarayar / Kadanthaiyar Chieftains :


"
ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை
நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல
கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப
நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும்
பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில்
பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும்
நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"

(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.).


"
மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில்
இந்திரன்" (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்)

(
இராமதாச பரம பாகவதர், கோதண்டராமசுவாமி சதகம், பாடல்-101)


"
சும்மாபோகும் பள்ளிக்கேன் அதிவீர பூபனெனும் பட்டந்தானே"

(
இராமசந்திரகவிராயர் அரியலூர் அரசரை "பள்ளி" என்று குறிப்பிடும் பாடல்), (தனிப்பாடல் திரட்டு).


"Palli Vellur Peraraiyan Sendan Kuttadudevan" (A.R.E. No.210 of 1940-41) (1125 A.D, Sendurai, Ariyalur Dist).


"Sendan Kuttaduvan alias Rajaraja Vangara Muttaraiyan" (A.R.E. No.16 of 1903) (1160 A.D, Tittakudi).


"Kadandai Sendan Adittan alias Rajaraja Vangara Muttaraiyan" (A.R.E. No.26 of 1903) (1171 A.D, Tittakudi).
Chola / Pandiya / Vijayanagar Inscriptions :


"The urar of Pilandur sold some lands for money to the local temple to pay ransom to the Kurumbar and Vanniyar who persecuted and forcibily put the villagers in Jail and demanded money." (A.R.E. No.229 of 1943-44), (Singalantakapuram, Rajendra Chola-I).


"
வெட்டமக்குடி வன்னிச்செய் மயக்கி
சந்திராதிதவற் செய்வித்தான் ஸ்ரீ
காரியம் ஆராஞ்ச மாறபிரா நம்பியென்"

(S.I.I. Vol-XIX, No.406, Page-214), (Kilappaluvur, Paluvettaraiyar Inscriptions).


"
வன்னி குன்றன் குமாரனெந் கங்கை கொண்ட சொழப்
பெரியனாய" (S.I.I. Vol-XVII, No.209), (Thiruvakkarai, Villupuram).


"
விக்கிரம சோழன் பட்டணத்து பிறிந்த சோழதிவாகர
நல்லூருடனட்டின நிலமாய உசாத்தானமான கேரளகுலாசனி
சருப்பேதி மங்கலத்து வன்னியரில் சோழயவரையன்
அகம்படியார்க் காவல் கூலிக்கு இட்ட நிலமாய வெனை"

(Thiruthuraipoondi Inscriptions No.203, Tamil Nadu Archaeology), (12th century).


"
சுத்தமலிவளநாட்டு வெண்ணிக் கூற்றத்துச் சிறுமங்கலத்துச்
சிறுமங்கலமுடையாந் வந்நிகொளரியான குலோத்துங்க சொழப்
பெரயனும்" (S.I.I. Vol-III, (part-III, IV & V) No.96), (Rajaraja Chola-III).


"Registers a sale of 100 kuli of land called karumanendal which formed the boundary of Mugalaru alias Kodandarama-Chaturvedimangalam by four persons to a certain Pichchan Vanniya Perumal for endowment to the shrine of Pidari" (A.R.E. No.214 of 1936-37), (Thirukkoyilur, Kulasekhara Pandiya period).


"
இந்த ஊரி
ல் வன்னிய வரி குதிரை ........
கை எச்சொறு உலுப்பை ........
யம் மற்றும் வன்னிய வரியை
நொக்கி வரும் வகை உண்டானது
எல்லாம் சறுவமானியமாக"

(S.I.I. Vol-V, No.45, (Appendix-I, Page-511), (Virinjipuram, Chaluva Narasingaraya Udaiyar).


"Records the voluntary sale by auction, of thirteen Kaikkolars of Almaiur in karaivali Aimpulu-nadu of Paluvurkottam in Jayangondasola-mandalam for 2380 vasi-padanar panam by themselves as a group of bonded labourers (kottuadimai) to the temple of Anaikatta Appan and their agreement, the males among them to perform services as lifting the deities in procession, acting as bodyguards and such other menial services due from their community, the females among them to dance, to sing and to perform other services. They are stated to have received the money from the Treasury of 'Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar', the Srikaryam of the Temple". (A.R.E. No.278 of 1977-78), (Vellore Taluk, Agaram, Gajendra Varadaraja Perumal Temple, Mallikarjuna Deva Maharaya, 1469 A.D).


"Records a similar transaction of four individuals viz., Periya Mudali and his three daughters, of Sattimangalam in Andi-nadu of Palur-Kottam to the same temple for 200 narpanam received from the same individual 'Vanniya Timmu Nayakkar' as in No.278 above". (A.R.E. No.279 of 1977-78), (Vijayanagar, Rajasekhara, 1471 A.D).


"Records the gift of villages Narasingapuram alias Sennamanayakkankuppam, Nagaratangal and Kelurtangal as Sarvamanya-Iraiyili for the Mahapujai to God Anaikatta Appan and the renovation of the garbhagriha ardhamandapa and other parts of the temple complex together with the creation of madaivilagam, etc, and also exemption from tax on the temple lands in the villages Agaram, Nagaleri, Karungali and Putteri as Sarvamanya by 'Samaya Kumaran Vanniyat - Timma Nayakkar. The arrangement regarding the services of the Kaikkolas is also referred to". (A.R.E. No.281 of 1977-78), (Vijayanagar, Deva Maharaya, 1431 A.D).

Note : The above Inscriptions Nos. 278, 279 & 281 refers "Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar". He belongs to family of "Damal Chennappa Nayyakkar"

Vijayanagar Inscription cont'd :


"Registers the assignment of the dues, viz, idangaivari and Jati-Kanikkai, collected from the residents of Tirupparambur and its hamlets by Idangai-Nattavar and Vanniyar in Solendrasingapura-pparru as sarvamanya for Mahapuja and lamp to the goddess." (A.R.E. No. 315 of 1954-55), (Kanchipuram Kamakshiamman temple, Vijayanagara, Mallikarjuna, 1457 A.D).
Sambuvarayar Chieftains :


"
அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான
ராஜகம்பீர சம்புவராயனென்" (S.I.I. Vol-I, No.74, Page-105).


Vanakovaraiyan Chieftains :


"An officer of 'Palli caste' named 'Sendan Sutta Mallan alias Vanakovaraiyan' received land called tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D". "His another record in Aduturai 1130 A.D mentions that he guilded the Tiruchirrambalamudaiyar temple with gold".

(N.D.I. No.169), (Newly Discovered Inscription by Dr. L. Thiyagarajan) : (A.R.E No.16 of 1913).


"Vanakovaraiyan Sutta Mallan Uttama Cholan alias Illangeswaran"

(A.R.E No.396 of 1924), (Melapaluvur, Ariyalur Distt, Kulottunga Chola - I, 1085 A.D).


"Vanakovaraiyan Sutta Mallan Chola Kula Sundaran alias Gangaikonda Chola Vanakovaraiyan"

(A.R.E No.246 of 1926), (Kilapaluvur, Ariyalur Distt, Kulottunga Chola - I, 1090 A.D).


"Vanakovaraiyan Sutta Mallan Mudikondan"

(A.R.E No.184 of 1934-35), (Aragandanallur, Tirukkoyilur Taluk, Kulottunga Chola - I, 1112 A.D)


"
மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
மஹாதெவர்க்கு" (Line - 2).

"
இச்சாத்தன் விரசொழனான வாணராஜர்" (Line - 3).

(S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola - I).


"
நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்"

(I.P.S. No.971), (
ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).


"
நெடுவாசல் சிமைக்குக் கறுத்தாவான பாண்டிய
பெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில்
திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும்
பமையவனப் பெருமாளான சிவலக் காலிங்கிராயரும்"

(I.P.S. No.942), (
ஆலங்குடி தாலுகா, அம்புக்கோவில்).



Irungolar Chieftains :


"Irungolar Pritivipathi Amani Mallar"

(A.R.E No.49 of 1918), (Virudachalam, Raja Raja Chola - I, 992 A.D).


"Irungolakkonar Amani Mallan Sundara Cholar"

(A.R.E No.41 of 1918), (Virudachalam, Raja Raja Chola - I, 1014 A.D).


"Palli Kuttan Madurantakan alias Irungolaraman"

(A.R.E No.259 of 1928-29), (Pennadam, Tittakudi Taluk, Vikrama Chola - I, 1130 A.D).


"Navalur Irungolar"

(N.D.I. No.252, 253), (Vasistapuram, Tittakudi Taluk, Kulottunga Chola - III).

"
கூடலூர்ப் பள்ளி ஆளப்பிறந்தான் மோகநான
குலோத்துங்க சோழ கச்சியராயநேன் வில்லிடைபிடித்தான்"
(A.R.E. No.374 of 1902).
14) கம்பரின் சிலையெழுபது.    
        சூரியகுலத்து வேந்தர் வன்னியர்கள்.
 காரிய மாக வென்று
     கனலினி   லுதித்த பேர்கள்
ஆரிய னமரர் தேவன்
     அருள்முனி குலீசன் மாயோன்
வாருதி யிலங்கை மூதூர்
     மன்னனை யழிக்க மிக்க
சூரிய  குலத்து   வேந்தர்
தோன்றுகைச் சிலைய தன்றோ.
அன்னியருக்குத் தமிழ் கற்பித்தோர்
அன்னிய  ராக வந்து
     அடைந்தவர் தமக்கு நூலைப்
புண்ணிய தமிழி னாலே
     பாவல ரான பேர்க்கு
முன்னின்று  செய்தார்  தங்கள்
     மற்றவன் கருமஞ் செய்து
வன்னிய ராசர் கையில்
     வாங்குகைச் சிலைய தன்றோ.
     அந்நியராக   வந்து நம் நாட்டில்  நிலையாக தங்கிவாழ்ந்த அவர்களுக்கு நம் இலக்கியக் கருத்துகளையம் வரலாற்றுச் சிறப்புகளையும்  நம் தமிழ் மொழியின் மூலமாகவே உணர்த்திய தமிழ் கவிஞர்களுக்கும் பெரும் புலவர்களுக்கும் முன்னோடியாக நின்று, அவர்கள் செயல்களிலே ஈடுபட்டுத் தமிழை வளர்த்தவர்கள் வன்னிய மன்னராவர். அவர்தம் கையிலே ஏந்தியிருப்பதும் வன்னியச்சிலையே யாகுமல்லவா.
வன்னியர் விருதுகள்.
     விருத்தாசலம் தர்மஸாஸனப்பட்டையம் கூறும் விருதுகள்.
1)     பத்துகாணித்தேர்
2)     வெள்ளையானை
3)     கொன்றைமாலை
4)     வாடதமாலை
5)     அக்னிக்குதிரை
6)     சாம்பிராணிகலசம்
7)     பகல்தீவட்டி
8)     சங்கு
9)     சக்கரம்
10) அறுகாற்பீடம்
11) மகரதோரணம்
12) பாதகளாஞ்சி
13) புலிக்கொடி
14) கருடக்கொடி
15) அன்னக்கொடி
16) மகரக்கொடி
17) மச்சக்கொடி
18) மயிற்கொடி
19) சிங்ககொடி
20) தவளசங்கு
21) புள்ளாங்குழல்
22) வாணத்தடுக்கு
23) முத்துக்குடை
24) வெள்ளைக்குடை
25) படைவாணக்கழி,
26) சவளக்கழி
27) சாமரை
28) ஈயோட்டி
29) வெள்ளைப்பாவாடை
30) கத்தி
31) கேடயம்
32) அம்புப்பட்டா
33) சமுதாடு
34) வளைதடி
35) லாந்தர்
36) அம்புறாத்தூணி
37) வில்
38) டங்கா
39) வெங்கலக்கொம்பு
40) நகார் காகளம்
41) வண்டை ஜயபேரிகை
42) தடி
43) முட்டி
44) வேட்டைநாய்.
முடிவுரை
            வன்னியர்களின் வரலாறுகளை அறிந்த மற்றவர்கள் வன்னியர் எனும் சொல்லுக்கு போலியாக உரிமைக்கோறும் நிலைதான் இன்று உள்ளது. வன்னியர்கள் தம் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்ட ஆதாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை எழுத காரணமாக இருந்த வன்னியர்களுக்கும். வன்னியர் வரலாற்றின் மீது பொறாமை கொண்டு போலி பிளாக்கர் எழுதிய மற்ற சமுகத்தவர்களுக்கும் நன்றிகள்.

1 கருத்து:

  1. Top Betting Sites with Crypto on Choegocasino
    With so many great games in this world, it is vital to understand why you should trust the 메리트카지노총판 best Crypto casinos choegocasino in this gambling 바카라 market.

    பதிலளிநீக்கு